தபால் மூலம் வாக்களிக்கும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
#Election
#Election Commission
#sri lanka tamil news
Prathees
2 years ago
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி பிப்ரவரி 22, 23, 24 ஆகிய தேதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ,நுவரெலியா மாவட்ட உதவித் தேர்தல் காரியாலயத்தில் இருந்து நுவரெலியா மாவட்ட பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்காக குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட தபால் விண்ணப்பங்கள் போதுமானதாக இல்லை என்றால், அதன் நகல் எடுத்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.கடந்த தேர்தல்களில் இப்படி நடக்கவில்லை என வாக்காளர்கள் கூறுகின்றனர்.