அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு வெடிபொருட்களுடன் சென்ற நபர் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்குள் நுழைய முயன்ற நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
உடமலுவா பொலிஸார் சந்தேக நபரிடம் இருந்து கற்களை எறிவதற்கு பயன்படுத்தப்படும் 35 கிராம் வெடிபொருட்கள் மற்றும் சேவை நாண் என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்ரீ மஹா போதியின் நுழைவாயில் மற்றும் பூஜை மைதானத்தில் மக்கள் சோதனையிடும் இடத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கலாவெவ பிரதேசத்தில் புதையல் ஒன்றைக் கண்டறிவதற்காக சந்தேகநபர் இந்த துப்பாக்கித் தூள் மற்றும் சேவை நூலை கொண்டு வந்ததாகவும், இன்று அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அதன் காரணமாக ஸ்ரீ மஹா போதியை வழிபட வந்ததாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.



