பல உயர் பொலிஸ் அதிகாரிகள் என்னை கொலை செய்ய முயற்சித்தனர்: வசந்த முதலிகே

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவு தொடர்பில் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைய மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் இன்று (02) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தான் கைது செய்யப்பட்டதன் பின்னர் பல உயர் பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்டு தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



