புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் அடங்கிய குழு ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு
#Ranil wickremesinghe
#SriLanka
#sri lanka tamil news
Prathees
2 years ago
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 06 உயர்ஸ்தானிகர்கள் இன்று (02) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர்.
கோட் டி ஐவரி, உருகுவே, மங்கோலியா, செர்பியா, சூடான், ஆர்மேனியா, வடக்கு மாசிடோனியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, சுவீடன் மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கான தூதர்களும், ஜமைக்கா, தான்சானியா, மலாவி, கனடா, மலேசியா மற்றும் மாலத்தீவுகளுக்கான உயர் ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை வரவேற்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் குறுகிய விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.