சிறையில் உள்ள கணவருக்கு போதைப்பொருள் கொண்டுசென்ற மனைவி விளக்கமறியலில்
#SriLanka
#drugs
#Women
#Arrest
#sri lanka tamil news
#Lanka4
Nila
2 years ago

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு அவரது மனைவி, டெனிம் காற்சட்டையின் இடுப்பு பட்டியில் மறைத்து கொண்டு சென்ற சுமார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (01) கைப்பற்றியதாக சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகமான சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சோதனையிட்டபோதே காற்சட்டையின் பேண்ட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண்ணையும் போதைப்பொருளையும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் ஏகநாயக்க தெரிவித்தார்.



