மின்வெட்டு அமுல்படுத்தப்படாது: நீதிமன்றத்தில் உறுதி அளித்த இலங்கை மின்சார சபை
#SriLanka
#sri lanka tamil news
#Court Order
#Electricity Bill
#power cuts
#Power
#Hydropower
Mayoorikka
2 years ago

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை, இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படக்கூடாது என வழங்கப்பட்ட உத்தரவை மீறி, இலங்கை மின்சார சபை செயற்பட்டமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, இலங்கை மின்சார சபையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா இந்த உறுதிமொழியை வழங்கினார்.



