மாதாந்த மின்கட்டணம் உயர்வால் தாயை தாக்கிய மகன் கைது
#SriLanka
#Attack
#Arrest
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

மின் கட்டணம் உயர்வினால் துணியை இஸ்திரி செய்ய வேண்டாம் வேண்டாம் எனக் கூறிய தாயை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்தை ஓமத்த பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் பக்கத்து வீட்டில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரது 66 வயதான தாயார், மின் கட்டணம் அதிகரித்துள்ளதால், வீட்டில் துணியை இஸ்திரி செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனையடுத்து தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாயின் தலைமுடியை மகன் பிடித்து தாக்கியதாக, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரின் 37 வயது மகன் கைது செய்யப்பட்டார்.



