அதிகரிக்கப்படும் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை!
#SriLanka
#sri lanka tamil news
#Food
#Litro Gas
#prices
Mayoorikka
2 years ago

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதே எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.



