இலங்கையில் 70 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவை: யுனிசெப் 

#Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
இலங்கையில் 70 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவை: யுனிசெப் 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை 70 லட்சம் பேர் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப்  அறிவித்துள்ளது.

சிறுவர்களுக்கான சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்றவை, அத்தியாவசிய சேவைகள் மருந்துப் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 23 லட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 56,000 குழந்தைகளுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.

அத்துடன் 4.8 மில்லியன் சிறுவர்களுக்கு தடையில்லா கல்வி கிடைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!