மாணவியை துஷ்பிரயோகம் செய்த கிரிக்கெட் பயிற்சியாளர் கைது
#Sexual Abuse
#Arrest
#Police
#Lanka4
Prathees
2 years ago

ஏழாம் ஆண்டு பாடசாலை மாணவி ஒருவரை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த பாடசாலையொன்றில் கிரிக்கெட் பயிற்சி ஆசிரியர் ஒருவர் கடந்த 31 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகிக்கப்படும் ஆசிரியர் பாடசாலையின் கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் என்பதும், மாணவியை பல தடவைகள் கடுமையாக துஷ்பிரயோகம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



