ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருக்கும் இடையில் அவசர சந்திப்பு: முக்கிய விடயங்களுக்கு தீர்வு

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராணுவத்தின் வசம் இருக்கும் நிலங்கள் ஏற்கனவே அறிவித்ததன் படி விடுவிக்கப்படும் என்றும், அதற்கு மேலதிகமாக பலாலி கிழக்கில் விவசாயத்திற்கு ஒரு பகுதி விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின் போது வன பாதுகாப்பு திணைக்களம் ஒவ்வெரு மாவட்டத்திலும் விடுவிப்பதற்கு தயாராக உள்ள பல நூறு ஏக்கர் காணிகளின் வரைபடங்களை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைப் பத்திரத்திலே சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் குருந்தூர் மலையை சுற்றியுள்ள விவசாய காணிகளை தாம் கையகப்படுத்தவில்லை என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளதோடு அதை விடுவிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக ஏற்கனவே பேசப்பட்ட அரசியல் அமைப்பில் இருக்கின்ற அதிகார பகிர்வு சம்மந்தமாக நடைமுறைப்படுத்துவது தேசிய காணி ஆணைக்குழு அமைப்பதற்கான சட்ட வரைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி கூறியிருந்தார் .
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவதும் ,உண்மை கண்டறிப்படும் அமைப்பை நிறுவுவதும் வருகின்ற வாரம் காண்பிப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு கொடுப்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்மந்தன் மற்றும் எம் ஏ சுமந்திரன் அகியோரும் ஜனாதிபதி சார்பில் அமைச்சர்களான பவித்திரா வன்னியராச்சி, டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலிசப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் தொல்லியல் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் என்பவற்றின் தலைவலர்களும் பங்குபன்றியிருந்தனர்.



