மற்றுமொரு பஸ்விபத்து: ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலர் காயம்

பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி மடோல்கெலே ஊடாக பன்வில நோக்கிச் சென்றதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்றதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளனர்.இதில் 16 பெண்களும் நான்கு ஆண்களும் காயமடைந்து மடோல்கெலே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
07 பெண்களும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தின் பிரேக் பழுதடைந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



