வீடொன்றில் நிர்வாணமாக ஆணொருவரின் சடலம் மீட்பு
#Death
#Colombo
Prathees
2 years ago

கல்கிஸ்ஸஇ தெலவலஇ பொச்சிவத்த பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பஸ் சாரதி எனவும் அவர் வேறு ஒருவருடன் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வீட்டில் கிடப்பதாக இறந்தவருடன் வீட்டில் தங்கியிருந்த மற்றைய நபர் வேறு ஒருவருக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன் பிற்பகல் இறந்தவரின் சகோதரருக்கு அந்தநபர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து சம்பவத்தை கூறினார்.
இறந்தவரின் சகோதரர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, இறந்தவர் அதிக இரத்தத்துடன் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.



