உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு
#Election
Prathees
2 years ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் வேட்புமனுக்களை கையளித்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு மணித்தியாலம் 30 நிமிடம் அவகாசம் வழங்கப்படும் என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அதன் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தால், அதற்கு எதிராக மக்களும் பதிலடி கொடுப்பார்கள் என ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.



