விசேட விமானத்தில் தாயகம் திரும்பிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
#SriLanka
#India
Prasu
2 years ago
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாலை நாட்டிலிருந்து வெளியேறினார்.
இன்று மாலை 4.50 மணிக்கு இந்தியா நோக்கி பயணமான விசேட விமானத்தில் அவர் தாயகம் திரும்பினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.