பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு இன்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதன்மை வேட்பாளரான, பூநகரி பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் உட்பட, வட்டார ரீதியாக 11 பேர் மற்றும் பொது வேட்பாளர்களாக 10 பேர் உள்ளடங்கலான 21 வேட்பாளர்களை நியமித்து, அதற்குரிய வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான கெளரவ சிவஞானம் சிறீதரன் இன்று காலை (2023.01.20) கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்துள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கடந்த புதன்கிழமை(18) கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



