தேவைப்படும் போதெல்லாம் இலங்கைக்கு ஆதரவு வழங்குவோம்: ரஷ்ய தூதுவர்
#SriLanka
#Russia
#Meeting
#economy
#technology
#லங்கா4
Mayoorikka
2 years ago

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கு இடையில் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.சகார்யன் தெரிவித்துள்ளார்.
நீதி அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.சகார்யன் ஆகியோருக்கிடையில் நீதியமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்படுவதாகவும், ரஷ்ய அரசின் மேலதிக ஆதரவை அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு தாம் பாடுபடப்போவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் இலங்கைக்கு தமது நாட்டின் ஆதரவை வழங்குவதாகவும் தூதுவர் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.



