இலங்கைக்கு விஜயம் செய்வாரா திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா?

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்று இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பீகாரின் புத்தகாயாவில் நடைபெற்ற பௌத்த துறவிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினரால் திபெத்திய தலைவரை கொழும்புக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டது.
எனினும் அவர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டத்தில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தலாய்லாமா இலங்கைக்கு வருகை தந்தாள் சீனா இலங்கை உறவில் பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் கடந்த காலங்களில் பேசப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பௌத்த மதத்துக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சித்து வருவதாக திபெத் பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கருத்துத்தெரிவித்திருந்தார்.



