தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசுகின்றார் ஜெய்சங்கர்!
#SriLanka
#Lanka4
#லங்கா4
Prabha Praneetha
2 years ago

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசவுள்ளார்.
மேலும் , இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்துள்ளார்.
நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார் என்பது



