இலங்கையில் சுதந்திர தினம் தேவைதானா? யாழ்ப்பாணத்தில் சிங்கள கட்சி கேள்வி

இலங்கையில் போராடுவதற்கு சுதந்திரம் இல்லை போராட்டக்காரர்கள் கொடூரமாக அடக்கப்படுகின்றார்கள் இந்த நிலையில் சுதந்திர தினம் தேவைதானா என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பினார்
இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் கடந்த காலத்தில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு ஜனநாயகரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் யுவதிகளை தற்போது சிறையில் அடைத்திருக்கிறீர்கள் அவர்கள் வாடுகின்றார்கள்.
அதேபோல நாட்டில் தற்பொழுது சுதந்திரம் இல்லை போராடுவதற்கு ஜனநாயக உரிமை இல்லை போராட்டக்காரர்கள் கொடூரமாக அடக்கப்படுகின்றார்கள் அவ்வாறான நிலையில் சுதந்திர தினம் தேவைதானா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலில் அவர்களுக்கு விடுதலையை கொடுங்கள் அதன் பிறகு நீங்கள் சுதந்திரத்திர தினத்தை கொண்டாடலாம் என தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் ஆடம்பர செலவுகளுக்கு பணத்தை செலவழிக்கின்றார்கள் ஆனால் இந்த தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறுவது வேடிக்கையான விடயமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.



