பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் சந்திப்பை மேற்கொண்ட ஜனாதிபதி
#Ranil wickremesinghe
#SriLanka
#Sri Lanka President
#Electricity Bill
#Lanka4
Kanimoli
2 years ago

ரணில் விக்ரமசிங்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையுடன், கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலுக்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு அழைப்பு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 2 மணிக்கு, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, அதன் உறுப்பினர்களை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், நான்கு பேர் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையில், ஏனைய மூவரும் ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.



