மத்திய கிழக்கு நாடொன்றிற்கு விற்கப்பட்ட அமெரிக்க நிறுவனமான WWE!
#world_news
#sports
Mayoorikka
2 years ago

அமெரிக்காவின் பிரபல மல்யுத்த விளையாட்டான WWE யை சவூதி அரேபியாவில் உள்ள முதலீட்டு நிறுவனமொன்று வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WWE இன் இணை-தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த ஸ்டெபானி மக்மஹோன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தபிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, வின்ஸ் மக்மஹோன் தனது ஓய்வு முடிவை கைவிட்டு, மீண்டும் WWE குழுவின் தலைவராக திரும்பியுள்ளதாகவும், நிறுவனத்தை பொதுப் பங்குச் சந்தையில் இருந்து விலக்கி மீண்டும் ஒரு தனியார் வணிகமாக மாற்றுவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
WWE என்பது உலகம் முழுவதும், மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் மிகப்பெரிய தொழில் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.



