முக்கிய இரு நாடுகள் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது! மத்திய வங்கி ஆளுநர்
#SriLanka
#India
#China
#Central Bank
Mayoorikka
2 years ago
இந்தியாவும் சீனாவும் இலங்கையின் கடன்களை குறைக்க ஒப்புக்கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறியுள்ளார்.
அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் நல்லது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடமைகளை நிறைவேற்றாமல், நீண்ட காலத்திற்கு இவ்வாறான நிலையில் இருக்க இலங்கையும் விரும்பவில்லை. அது நாட்டுக்கும் மக்களுக்கு நல்லதல்ல எனவும் சுட்டிக் காட்டியிருந்தார்.
அத்துடன் இந்த நிலை இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு நல்லதல்ல என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.