கனடாவின் முடிவுக்கு இலங்கையிடமிருந்து எதிர்ப்பு
#Canada
#SriLanka
#Mahinda Rajapaksa
Prathees
2 years ago

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் கனடா அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்று காலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடிய உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து கனடாவின் இந்த முடிவுக்கு உத்தியோகபூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தடைகளை விதிக்க கனேடிய அரசாங்கம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நான்கு பேர் கனடாவில் குடியேற்றம் அல்லது அகதிகள் பாதுகாப்புக்கு தகுதியற்றவர்கள் என்று கனேடிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.
மேலும் அவர்கள் கனடாவுடன் எந்த வியாபாரமும் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



