15,000 மருத்துவர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Prathees
2 years ago

அநீதியான வரி திருத்தங்களை நீக்குமாறு கோரி 15,000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களின் கையொப்பத்துடன் கூடிய மனுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் வகையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால். அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.



