அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Sri Lanka President
#America
Mayoorikka
2 years ago
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியும் தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளருமான எலைன் லாபச்சர் (Eileen Laubacher) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
எலைன் லாபச்சர் (Eileen Laubacher)இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எலைன் லாபச்சரை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, ஏனைய அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.