ஆலோசகர் ஆஷு மாரசிங்கவின் காதலியின் தனிப்பட்ட மனுவை நிராகரித்த கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன
Prasu
2 years ago
பொலிஸாரால் தாம் கைதுசெய்யப்படுவதனை தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்கவின் காதலி என கூறப்படும் வகிஷா ஆதர்ஷா சமர்ப்பித்த தனிப்பட்ட மனுவை கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் நிராகரித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பிணை வழங்கக் கூடிய குற்றங்களாகத் தோன்றுவதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இல்லையெனவும் நீதிவான் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை முன்வைக்க நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையின்பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவின் அதிகாரிகள் ஆஜராகியிருந்ததுடன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவுடன் சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது.



