போராட்டத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைந்து ஒளிபரப்பை நிறுத்திய நபர் கைது
Prasu
2 years ago
இளைஞர்களின் தன்னார்வ போராட்ட காலத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் ஒளிபரப்பை நிறுத்திய சந்தேகத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்து அதன் ஒளிபரப்புகளை நிறுத்தியமை தொடர்பான விசாரணைகளின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (11) அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.