இலங்கைக்கான மூன்று வெளிநாட்டு தூதுவர்களை நியமிக்க ஒப்புதல்!
#SriLanka
Mayoorikka
2 years ago

இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக HMGRRK விஜேரத்ன மெண்டிஸை நியமிப்பதற்கும் உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக கபில சுசந்த ஜயவீரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு, எத்தியோப்பியா கூட்டாட்சிக்கான இலங்கையின் தூதுவராகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் கே.கே.தேஷந்த குமாரசிறியை நியமிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



