ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்! நடந்து என்ன?
#SriLanka
#Sri Lanka President
#Tamil People
#TNA
Mayoorikka
2 years ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விடயம் என்பவற்றுக்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் ஒருவார அவகாசத்தை ஜனாதிபதி தரப்பு கோரியமைக்கு அமைய, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்களின் முன்னேற்றங்களுக்கு அமைய தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.



