ஜனவரி 1ம் திகதி முதல் மின் கட்டணத்தை திருத்த முடியாது: பொதுப்பயன்பாட்டு ஆணையம்
#Electricity Bill
Prathees
2 years ago
அமைச்சர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ள முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் திருத்தங்களை சமர்ப்பிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டார்.