தென்னிலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் தொடர்பாக வெளியான தகவல்

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வடக்கில் அதிகளவான யுவதிகள் தென்னிலங்கையில் தனியார் துறை வேலைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை அவர்களில் கணிசமானோர் விபச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் கொழும்பு மருதானை பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 19 பெண்களில் 11 பேர் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், ஆனால் குடும்பத்தை நடத்துவதற்கு பணம் அனுப்ப முடியாததாலும், வாழ்வதற்கு போதிய வருமானம் இல்லாததாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இளம் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
தென்னிலங்கையில் இருந்தும் சில தரகர்கள் வடமாகாணத்திற்கு வந்து தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கி வடக்கின் யுவதிகளை ஏமாற்றி தென் பிராந்தியத்திற்கு அழைத்துச் சென்று மிகக் குறைந்தளவிற்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.



