அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு
#SriLanka
#Salary
Prathees
2 years ago

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்த தேவையில்லை எனவும், அந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதில் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சில திட்டங்களுக்கான கட்டணங்களைத் தீர்ப்பதற்கான முறையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



