சுவிஸில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டில் புத்தகங்களுடன் என்ற நிகழ்வு!

#Switzerland #swissnews #Swiss University
Mayoorikka
3 years ago
சுவிஸில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டில் புத்தகங்களுடன் என்ற நிகழ்வு!

சுவிஸில் புத்தாண்டில் புத்தகங்களுடன் என்ற நிகழ்வு கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த புத்தகக் கண்காட்சியில் கலை, பண்பாடு, அரசியல், அறிவியல், வரலாறு, ஆன்மீகம் என பலதரப்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டது.

சுவிஸில் அண்மையில் வெளியான எமது மக்களின் விடுதலைக்காக , நினைவழியா நாட்கள் ஆகிய புத்தகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

சுவிஸில் முதன்முறையாக புத்தக கண்காட்சி கடந்த நவம்பர் மாதம் சூரிஸ் நகரில் இடம்பெற்றிருந்தது.

புத்தாண்டில் புது முயற்சியாக இந்த புத்தக கண்காட்சி லூட்ஸன் கன்ரோனில்  நடைபெற்றது.

 இந்த புத்தக கண்காட்சியில் இரண்டு புத்தகங்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

குறித்த புத்தகக் கண்காட்சிக்கு பல புத்தக ஆர்வலர்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லூட்ஸன் மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலிருந்தும் பல  புத்தக ஆர்வலர்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கி இருந்தார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4