பிரித்தானியாவில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ளும்போது ஏற்படும் இடர்களை சமாளிப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசு!

ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற முக்கிய பொதுத் துறைகளில் பணிப்புரியும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளும்போது ஏற்படும் இடர்களை சமாளிப்பதற்காக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீ, ஆம்புலன்ஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு நிலைமைகளை அமைக்க வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் மசோத ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி, குறிப்பிட்ட சதவீத தொழிலாளர்கள் வேலைநிறுத்த நாட்களில் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தும் வகையில் வடிமைக்கப்படவுள்ளது.
அதேநேரம் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத்தால் பணிக்கு வருமாறு அழைக்கப்பட்ட பின்னரும், திரும்பவில்லையெனில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வணிக செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், வேலைநிறுத்தம் செய்வதற்கான சுத்திரத்தைப் பாதுகாப்பதுடன், அரசாங்கம் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார்.



