சுவிஸ் லுசேர்ன் மாகாணத்தின் A2 நெடுஞ்சாலையில் 24 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

#Switzerland #swissnews #Accident #Police
Mayoorikka
3 years ago
சுவிஸ் லுசேர்ன் மாகாணத்தின் A2 நெடுஞ்சாலையில் 24 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

சுவிஸ் லுசேர்ன் மாகாணத்தின்  Knutwil A2 நெடுஞ்சாலையில் இன்று காலை பாரிய வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

 குறித்த நெடுஞ்சாலையில் பயணித்த 24 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது  எட்டு பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக  ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் 15 பேர் மேலும் சிகிச்சைக்க அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பாரிய விபத்து சம்பவத்தினால் தெற்கு நோக்கி செல்லும் AUTOBHAN பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டு தற்போது மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 24 வாகனங்கள் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாவது மிகவும் அரிதாகவே நடக்ககூடிய ஒன்றாக இருக்கிறது.

எனினும் இச்சம்பவம் தற்போது இடம்பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

விபத்து தொடர்பாக விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4