அமெரிக்காவில் வீசி வரும் அதிக பனிப்புயல் காரணமாக உறைநிலைக்கு சென்ற நயகரா நீர்வீழ்ச்சி
#America
#நயகரா
#நீர்வீழ்ச்சி
#Blizzard
Prasu
2 years ago

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பணியில் உறைந்து காணப்படுகிறது.
இதனால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டியுள்ளது.
இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது.
மேலும் சில இடங்களில் நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளது



