ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடொன்றிலிருந்து முதற் தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகள்!
                                                        #SriLanka
                                                        #Tourist 
                                                        #European union
                                                        #Airport
                                                        #Passport
                                                    
                                            
                                    Mayoorikka
                                    
                            
                                        2 years ago
                                    
                                ஐரோப்பிய கண்டத்திலுள்ள மோல்டா நாட்டிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகள் முதற்தடவையாக இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்து குறித்த சுற்றுலாப், பயணிகள் இலங்கையில் 12 நாள்கள் தமது சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
50 பேரைக் கொண்ட குறித்த சுற்றுலாக் குழுவினர் இலங்கையின் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் செல்ல எதிர்பார்த்துள்ளனர்.
இவர்களை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், விமானசேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் பீ.ஏ.சந்ரசிறி உள்ளிட்டவர்கள் விமானநிலையத்துக்கு வருகைத் தந்திருந்தனர்.