கண்டி வெள்ளத்தில் மூழ்கியமைக்கான காரணம்
#Flood
#kandy
#SriLanka
Prabha Praneetha
2 years ago
கண்டி புகையிரத நிலையம் உள்ளடங்களாக நகரின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்குவதற்கு வடிகால் அமைப்பு முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக கண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கண்டி புகையிரத நிலையம், மத்திய மாகாண கல்வி திணைக்கள கட்டிடம் மற்றும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.