காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!
                                                        #Vegetable 
                                                        #prices 
                                                    
                                            
                                    Prabha Praneetha
                                    
                            
                                        2 years ago
                                    
                                கடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.