மத்தள விமான நிலையத்திற்கு 2017 முதல் 2021 வரை 2000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்
Prathees
3 years ago
மத்தள விமான நிலையத்திற்கு முதலீட்டாளர் ஒருவரை வழங்குவதற்கு அபிலாஷைகள் கோரப்பட்ட போதிலும் இதுவரை நிரந்தர முதலீட்டாளர் எவரும் முன்வரவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.
எனினும் விமான பராமரிப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சிலர் முன்வருவதாகவும் அவர் கூறினார்.
2017 முதல் 2021 வரை விமான நிலையத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கையாளர் அறிக்கை காட்டுகிறது.
விமான நிலையத்தின் இயக்கச் செலவு இருநூறு கோடி ரூபாயைத் தாண்டியிருந்தாலும் அதன் வருமானம் அதில் 5% மட்டுமே.