ஒரு ட்ரில்லியன் ரூபா வரி வருவாயை பெற்றுக்கொள்ள கணனிமுறை இன்னும் மேம்படுத்தப்படவில்லை

தவறான இணையமுறை( ஒன்லைன்) காரணமாக 2023 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு வருவாய்த் துறையின் வரி வசூல் இலக்குகளில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த ஒன்லைன் திட்டத்தை மேம்படுத்த, 8 பில்லியன் ரூபாய் நிதி, திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது.
எனினும் திறைசேரி இன்னும் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.
திணைக்களத்திற்கு ஒரு டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒன்லைன் திட்டத்தை மேம்படுத்தாமல், அந்த எதிர்பார்த்த வருவாயை பெறமுடியாது என்று அரச அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது திணைக்களத்தின் கணினியில், வரி அறிவிப்புகள் உருவாக்கப்படவில்லை. வரி மற்றும் வரிக் கடன் பற்றிய தகவல்களைப் பெற முடியவில்லை. தேவைகளுக்கு ஏற்ப அறிக்கைகளைப் பெற முடியவில்லை.
அத்துடன் வெட் வரியைக் கணக்கிடுவதற்கான உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளுடன் பொருந்தாததில் உள்ள சிரமங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தநிலையில் திணைக்களம் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு (ஆர்ஏஎம்ஐஎஸ்) என்பன, திட்டத்தை மேம்படுத்த சிங்கப்பூர் நிறுவனத்தை நாடியுள்ளன.
இந்த கணினி அமைப்பை நிறுவுவதற்கு ஏற்கனவே 8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டபோதும், அதில் பயன் ஏற்படவில்லை.
இந்தநிலையில் வரி கோப்புகள் குவிந்து வருகின்றன.
இந்த கணினி குறைபாடுகள் காரணமாகத் திணைக்களம் தற்போது சுமார் 700,000 கோப்புகளை கைமுறையாகவே கையாண்டு வருகிறது.
எனவே இந்தமுறையில் வரி சேகரிப்பை மேற்கொண்டு புதிய இலக்கை அடையமுடியாது என்று அதிகாரிகளும், தொழிற்சங்கத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்



