அனைத்து தரப்பு மக்களுடனும் இணக்கமாக செயற்படுமாறு அஸ்கிரி தரப்பிலிருந்து வேண்டுகோள்
Prathees
2 years ago

அனைத்து தரப்பு மக்களுடனும் இணக்கமாக செயற்படுவதற்கு கிறிஸ்மஸ் தினத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாடு தற்போது நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளதால், ஏனைய மக்களுக்கும் உதவிகள் செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பன்னிப்பிட்டியிலுள்ள கிறிஸ்து ராஜா தேவாலயத்தில் நேற்று கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் கர்தினால் ரஞ்சித் தலைமையில் விசேட தெய்வீக ஆராதனை ஒன்று இடம்பெற்றது.



