வெள்ளத்தில் மூழ்கிய கண்டி மற்றும் அக்குறணை நகரங்கள்
Prathees
2 years ago

கடும் மழை காரணமாக கண்டி மற்றும் அக்குறணையில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கண்டி புகையிரதப் புறத்தினுள் நீர்மூழ்கிக் கிடப்பதால், மலையக புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பில் இருந்து கண்டி செல்லும் புகையிரதம் பிலிமத்தலாவை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து தீவுக்குள் நுழைந்து இலங்கையை கடப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி காரணமாக கண்டி, நுவரெலியா, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



