கொழும்பு துறைமுக நகரில் சுமார் 80,000 புதிய குடியிருப்பாளர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்
Kanimoli
2 years ago

கொழும்பு துறைமுக நகரில் சுமார் 80,000 புதிய குடியிருப்பாளர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இலங்கை மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இங்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும் என கொழும்பு துறைமுக நகர அலுவலகத்தின் மூத்த பேச்சாளர் தெரிவித்தார்.
துறைமுகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வரும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டு குடியிருப்பு விசா வழங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
துறைமுகத்தின் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் துறைமுகத்திற்கு புதிய தொகுதி கூட உருவாக்கப்படலாம் என மற்றொரு முதலீட்டு நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.



