நத்தார் பண்டிகையை சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு புதியதோர் அடித்தளமாக ஆக்கிக்கொள்வோம்: பிரதமர் வாழ்த்து
Mayoorikka
2 years ago

உலகை யதார்த்தபூர்வமாக நோக்குவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற நத்தார் பண்டிகையை, அன்பையும், மனித மாண்பையும், மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமுதாயத்திற்கான புதியதோர் அடித்தளமாக ஆக்கிக்கொள்வோம் என பிரதமர் தினேஸ் குணவர்தன தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வெறுப்பையும் குரோதத்தையும் ஒழித்து, மோதல்கள் தீர்க்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் உணவுப் பயிர்கள் செழித்து விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை மற்றுமொரு ஆரம்பமாக மாற்றிக் கொள்ள முடியும்.
அமைதி, சமாதானம், சமத்துவம் போன்ற அற்புதமான போதனைகளின் அடிப்படையில் ஏனையவர்களுக்கு உதவுவதன் மூலம் நத்தார் பண்டிகையை அர்த்தமிக்கதாக கழிப்போம் என்று பிரதமர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.




