யாழ்ப்பாணம் செம்மண்பிட்டி, இலட்சுமன் தோட்டம் தும்பளையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் செம்மண்பிட்டி, இலட்சுமன் தோட்டம் தும்பளையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சமபவம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய கிருஷ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் மதில் சுவரில் ஏறி நின்றபோது அது இடிந்து வீழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
இதன்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.