15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்தி மதுபானம் அருந்தச் செய்து மூவரால் பாலியல் துஷ்பிரயோகம்
இறக்குவானையில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற நபரொருவர், பாழடைந்த வீடு ஒன்றுக்குள் கொண்டு சென்று மது அருந்த வைத்து பலாத்காரம் செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வு செய்த பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவருவதாக அந்தப் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மேலும் இருவரையும் கைது செய்ய இறக்குவானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபருடன் இந்த மாணவி காதல் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் காதலன் என்று கூறிக்கொண்ட 24 வயது இளைஞர், முதலில் மதுபானம் அருந்த வற்புறுத்தி அதனை அருந்தச் செய்த பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவரது இரண்டு நண்பர்களும் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




