ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகளவு ரயில் பயணத்தையே விரும்பும் சுவிஸ் மக்கள்-ஆய்வில் தகவல்

சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவு ரயிலில் பயணிப்பதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் சுவிஸ் மக்கள் கூடுதலாக ரயிலில் பயணிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் 48 ரயில் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ரயில் போக்குவரத்து செய்வதில் சுவிட்சர்லாந்து பிரஜைகள் முன்னிலை வகிக்கின்றனர்.
லிட்ரா பொதுப் போக்குவரத்து ஒன்றியத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு பிரஜையும் சராசரியாக 1628 கிலோ மீற்றர் ரயில் பயணம் செய்துள்ளனர்.
இரண்டாம் நிலை வகிக்கும் பிரான்ஸ், பிரஜையொருவர் 1118 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளார். எவ்வாறெனினம், கோவிட் காரணமாக இன்னமும் ஐரோப்பாவில் ரயில் பயணங்கள் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை என லிட்றா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டில் சுவிஸ் பிரஜைகள் அதிகளவில் ரயில் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.




