இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னைத்தானே கத்தியால் தனது வயிற்றுப் பகுதியை வெட்டிய சம்பவம் பதிவு
Kanimoli
2 years ago

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னைத்தானே கத்தியால் தனது வயிற்றுப் பகுதியை வெட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லஷ்சபான தோட்டத்தில் வாழமலை பிரிவில் இடம் பெற்றுள்ளது.
33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு குடும்ப தகராறு காரணமாக விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இதனை அடுத்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு அதி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



